சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் டிரஸ் தொடரில் விளையாடி வரும் நிலையில் அஸ்வின் தற்போது ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அஸ்வின் ஓய்வு குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது ஒரு இளம் பந்துவீச்சாளராக இருந்து நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக நீங்கள் வளர்ந்ததை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அடுத்த தலைமுறை பவுலர்கள் அஸ்வினால்தான் நான் பவுலர் ஆனேன் என சொல்லுவார்கள் என்பது எனக்கு தெரியும். உங்களை மிகவும் மிஸ் பண்ணுவேன் என எமோஷனலாக பதிவிட்டுள்ளார்.