உலக கேரம் சாம்பியன்ஷிப்.. தங்கம் வென்ற ஆட்டோ ஓட்டுநரின் மகளுக்கு ரூ.1 கோடி வழங்கிய உதயநிதி!
Dinamaalai December 18, 2024 08:48 PM

 உலக செஸ் சாம்பியன் போட்டியில் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி பரிசு வழங்கிய நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவித்து, இப்படி விளையாட்டு வீரர்களை தமிழக அரசு உற்சாகப்படுத்துவது நல்ல விஷயம் தான். ஆனால், என் மகள் உலக கேரம் போட்டியில் அடுத்தடுத்து 3 தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார். என் மகளுடன் இன்னும் இரு தமிழக மாணவிகளும் உலக கோப்பைப் போட்டியில் சாதித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு தமிழக அரசு எந்த பரிசும் வழங்கவில்லை. சதுரங்க விளையாட்டிற்கு மட்டுமே தமிழக அரசு அதிக முக்கியத்துவம் தருவது வருத்தமடைய செய்கிறது.

பிற விளையாட்டுக்களையும் அங்கீகரித்து, அவர்களையும் உற்சாகப்படுத்தலாம் என்று வாடகைக்கு ஆட்டோ ஓட்டி தன் மகள் கனவுக்கு வழிகாட்டி சாதிக்க உதவிய மாணவி காசிமாவின் தந்தை  பேட்டியளித்திருந்தது வைரலானது. இது குறித்த செய்தியை நமது தினமாலையிலும் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த உலக கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில்  சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஆட்டோ ஓட்டுநர் மெஹபூப் பாஷாவின் மகள் காசிமா மற்றும் மதுரையைச் சேர்ந்த மித்ரா, சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நாகஜோதி ஆகியோருக்கு துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான  உதயநிதி பரிசு வழங்கினார். 

பெண்கள் பிரிவில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை வழங்கினார். மேலும், இரட்டையர் பிரிவு, குழு பிரிவில் சாதனை படைத்த கேரம் வீராங்கனைகள் மித்ரா மற்றும் நாகஜோதிக்கு தலா ரூ.50 லட்சம் பரிசுத்தொகையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.