தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியதாவது, அரசியலுக்கு வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நான் வரவேற்கிறேன். உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதர் அரசியலுக்கு வர நினைக்கிறார். அவர் அரசியலில் ஏற்ற இறக்கங்களையும் துரோகிகளையும் சந்திப்பார். அரசியலில் கருணாநிதி ஜெயலலிதாவை போல நீண்ட அரசியல் பயணத்தை மேற்கொள்ளட்டும். ஒரு தேர்தலில் எதையும் மாற்றி விட முடியாது.
இன்று தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜ, நாம் தமிழர், தவெக என ஐந்து முனை போட்டி நிலவுகிறது. ஆனால் இந்த ஐந்து கட்சிகளும் வெவ்வேறு அரசியலை முன்னெடுத்து செல்கிறது. சரியாக அரசியல் செய்கிறோம் என திமுகவும், சரி செய்வோம் என அதிமுகவும் சொல்கின்றனர். பாஜக பொது அரசியலை கொண்டு வருவோம் என சொல்கிறோம். சீமான் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என கூறுகிறார். எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என நைனார் நாகேந்திரன் நினைக்கிறார்.
வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலை பொருத்தவரை எல்லோரும் தெளிந்து ஓட்டு போட போகிறார்கள். தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி ஆட்சி தான் அமையும். தேர்தல் அரசியல் களம் மாறிவிட்டது. 2026 பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசை. இந்த காலகட்டத்தில் கூட்டணி அமைப்பது என்பது சாத்தியம் கிடையாது. மாநிலத் தலைவராக இருக்கும் நான் கவனத்துடன் பேச வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக தவெக உடன் கூட்டணி இல்லை என அண்ணாமலை பேசியுள்ளார்.