வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிறது என்றால், கண்டிப்பாக அது சமூகத்தில் உள்ள பிரச்சனையையும் பேசும் எனபது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படி மக்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரம் குறித்தும், அதனை எதிர்த்துப் போராடுவதைக் குறித்தும் பேசிய படம் விடுதலை பாகம் ஒன்று.
இப்படத்தில் சூரி கதையின் நாயகனாகவும்வாத்தியாராக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். மேலும் கவுதம்மேனன், இளவரசு, ராஜிவ் மேனன், சேட்டன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து விடுதலை பாகம் இரண்டு (வருகின்ற 20ஆம் தேதி) நாளை வெளியாகிறது. இப்படத்தில் கூடுதலாக மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப், கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தைக் காட்டிலும் இரண்டாம் பாகத்தில் அதிகப்படியான வன்முறை காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம் . முன்னெச்சரிக்கைஇயாக 18 வயதிற்கு குறைவானவர்கள் இந்த படத்தை தவிர்க்கும் விதமாக படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் இருந்த நிலையில் தற்போது படத்தில் இருந்து 8 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.
விடுதலை 2 படத்திற்கு அதிகாலை 9 மணி சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் நடத்தும் நேரத்தை அதிகப்படுத்துவதால், சுகாதார குறைபாடுகள் மற்றும் கூட்ட நெரிசல் ஏதும் ஏற்படாமலும், திரைப்படம் காண்போரின் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையிலும், காவல் துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பெறுவதற்கு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்றும், மேலும், மக்கள் மற்றும் பார்வையாளர்கள் திரளாக உள்ளே வரவும், சிரமமின்றி வெளியேறவும், திரையங்கத்தினை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கவும், போதுமான இடம் மற்றும் கால இடைவெளியுடன், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன், இன்ஃபோடெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தார் கோரிய "விடுதலை பாகம்-II" என்ற தமிழ் திரைப்படத்திற்கு 20.12.2024 அன்று காலை 9 மணிக்கு ஒரு சிறப்பு காட்சியினை திரையிட அனுமதி வழங்குவது குறித்து, தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை விதிகள், 1957-68TUL9. உரிய விதிமுறைகளுக்குட்பட்டு, அரசளவில் முடிவெடுக்கலாம் " என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.