கல்யாணமாகி முழுசா ஒரு வாரம் கூட இன்னும் முடியாத நிலையில், கழுத்தில் மஞ்சள் தாலியுடன் மாடர்ன் டிரெஸ்ல நான் இன்னொரு ரவுண்ட் வருவேன் என்று சொல்லும் விதமாக பாலிவுட் திரையுலகிற்கு ஏற்றாற் போல நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி படவிழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.
நடிகை சமந்தா விஜய் நடித்த தெறி படத்தின் இந்தி ரீ-மேக் படமான ‘பேபி ஜான்’ படத்தில் சமந்தாவின் கேரக்டரில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இம்மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி ரிலீஸாக இருக்கும் இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் நடிகை கீர்த்தி சுரேஷ் செம அல்ட்ரா மாடர்ன் ட்ரெஸ்ஸில் கழுத்தில் தாலியின் மஞ்சள் வாசம் கூட போகாத நிலையில் கலந்துக் கொண்டுள்ளார்.
இந்த படவிழாவின் புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. திருமணத்திற்கு பின் கீர்த்தி சுரேஷ் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி என்றாலும் இப்போதே இந்தி திரையுலகிற்கு ஏற்றாற் போல், திருமணத்திற்குப் பின்னரும் தான் க்ளாமராக நடிக்க தயார் என்று சொல்லும் விதமாக கலந்துக் கொண்டதாக இந்தி மீடியாக்கள் புகழ்கின்றன. தமிழில் க்ளாமர் காட்டாத கீர்த்தி சுரேஷ் இந்தியில் ரொம்பவே தாராளமாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.