நாளை மறுநாள் சம்பவம்... பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் 2 கோள்கள்... நாசா எச்சரிக்கை!
Dinamaalai December 19, 2024 11:48 PM

அமெரிக்கா  விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா  வானியல் நிகழ்வுகளை தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 21ம் தேதி அன்று மிகப்பெரிய வீடு அளவிலான ஆஸ்டிராய்டு எனப்படும் 2 கோள்கள் பூமியைக் கடந்து செல்லும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இவை இரண்டும் பூமியின் மீது மோதினால் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கலாம். 

இருப்பினும், இவை பூமிக்கு அருகே எந்தவொரு பாதிப்பும் இன்றி கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த கோள்களில்  சிறிதாக சுமார் 50 அடி சுற்றளவில், ஒரு சாதாரன வீட்டின் அளவை ஒத்து இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு சுமார் 47,634 கி.மீ. வேகத்தில், இந்திய  நேரப்படி  டிசம்பர் 21 மாலை 3.03 மணிக்கு  சுமார் 1,06,000 கி.மீ தொலைவில் பூமியைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு 2024 XQ4 எனும் அடையாளப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக பூமியைக் கடக்கவிருக்கும் 2024 XN15 (எக்ஸ்என்) எனும் அடையாளப் பெயர் சூட்டப்பட்டிருந்தன. இந்த சிறுகோளானது 2024 XQ4 (எக்ஸ்க்யூ) ஐ விட சற்று பெரியதாக 60 அடி சுற்றளவில் மணிக்கு 35,051 கி.மீ. வேகத்தில், இந்திய மணிக்கணக்கில் டிச. 21 மாலை 2.38 மணியளவில், சுமார் 37,80,000 கி.மீ. தொலைவில் பூமியை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.

நாசா 150 மீ. சுற்றளவுக்கும் மேல் 7.5 மில்லியன் கி.மீ. தொலைவுக்குள் பூமியைக் கடந்து செல்லும் பொருள்களை அபாயகரமான பொருளாக கொள்ளப்படுகிறது.  இதில் தற்போது கடக்கவிருக்கும் 2024 XN15 மற்றும் 2024 XQ4 ஆகிய இரண்டு கோள்களும் இந்த வரம்புக்குள் அடங்கலாம் எனத் தெரிகிறது.  

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.