பல பணியிடங்களில் நீங்கள் நச்சுத்தன்மை வாய்ந்த நிகழ்வுகளை அனுபவித்திருக்கலாம் அல்லது படித்திருக்கலாம். ஆனால் முதலாளிகள் நடந்து செல்லும் போது தரையில் படுத்து அவர்களின் காலில் விழுவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா. ஆமாம்.. சீனாவில் உள்ள குவாங்சோவில் ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள், முதலாளிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தரையில் படுத்து கொள்கின்றனர். வழக்கமான அலுவலங்களில் பெரும்பாலான ஊழியர்கள் தங்கள் முதலாளியை ஹலோ அல்லது குட் மார்னிங் என்று வாழ்த்துவார்கள்.
ஆனால் ‘கிமிங்’ என்று அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் தங்கள் மேலதிகாரிகளை வரவேற்க தரையில் படுத்துக்கொள்ள சொன்னதாக கூறப்படுகிறது. அவர்கள் முதலாளியை வணங்குவது மட்டுமின்றி முதலாளியையும், நிறுவனத்தையும் பற்றி புகழ்ந்து முழங்க வேண்டும். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்த நிலையில், பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மற்றொரு வினோதமான வழக்கில் ஒரு நிறுவனம் தனது ஊழியர்களை தண்டிக்க ‘மிளகாய்’ சாப்பிட சொன்னாதாக புகார் செய்யப்பட்டது.