தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழில் ஐயா என்ற படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக முதன் முதலில் நடித்தார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிகையாக நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்று ரசிகர்கள் பலராலும் “லேடி சூப்பர் ஸ்டார்” என அழைக்கப்படுகிறார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் பல நேர்காணல்களில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஒரு நேர்காணலின்போது நடிகர் ரஜினிகாந்துடன் சந்திரமுகி படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.
இதில் அவர் கூறியதாவது, சந்திரமுகி பட பிடிப்பில் முதல் நாளே நடிகர் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டிய காட்சி இருந்தது. ஆனால் அப்போது அவர் மிகப்பெரிய நடிகர் என்பது எனக்கு தெரியாது. அது தெரியாமல் இருந்தது தான் எனக்கு மிகவும் உதவியது. அவர் முன்னணி நடிகர் எனத் தெரிந்திருந்தால், பயம் ஏற்பட்டிருக்கும். திரையுலகில் அவர் எவ்வளவு முன்னணி நடிகர் என்பது குறித்த எனது அறியாமை தான் அன்று எனக்கு உதவியாக இருந்தது எனக் கூறியுள்ளார்.