இந்திய கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தனுஷ், அஸ்வின் ஓய்வு தொடர்பாக தனது எக்ஸ் தளபதிவில் நம்ப முடியாத நினைவுகளை அளித்த அஸ்வினுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
அதோடு இத்தனை ஆண்டுகளாக நீங்கள் செய்த சாதனைகளுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார். அதோடு இந்திய கிரிக்கெட் நிச்சயமாக ஒரு சாம்பியன் பந்து வீச்சாளரை மிஸ் பண்ணும் என்று கூறியதோடு உங்களை விரைவில் மஞ்சள் நிற ஜெஸ்ஸியில் காண ஆவலுடன் காத்து இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.