சேலம் ஆத்தூரில் வைத்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது, “தமிழகத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிப்பதற்கு கஞ்சா போதை தான் காரணம்.
நிம்மதியாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அவல ஆட்சி நடைபெறுகிறது. திமுகவை வேரோடு அழிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் அதிமுக” எனக் கூறியுள்ளார்.