பெண் அமைச்சர் பற்றி அவதூறு பேச்சு.. கர்நாடக பாஜக தலைவர் சி.டி.ரவி அதிரடியாக கைது!
Dinamaalai December 20, 2024 03:48 AM

கர்நாடகா பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரை ஆபாசமாகப் பேசியதாக  கர்நாடகா பாஜக  தலைவர் சிடி ரவி  கைது செய்யப்பட்டார். பெலகாவியில் உள்ள சுவர்ண விதான சவுதாவில் இருந்து  ஹிரேபாகேவாடி போலீசாரால் ரவி கைது செய்யப்பட்டு பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஹெப்பால்கர் அவர் மீது புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் ரவி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவி மீது  (பாலியல் தகாத கருத்துக்களை தெரிவித்ததற்காக) பிரிவு 79 (ஒரு பெண்ணின் அடக்கத்தை அவமதிக்கும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

ரவி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பாஜக எம்எல்ஏக்கள் சுவர்ணா சவுதா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர் மற்றும் ரவியை தாக்க முயன்றதாகக் கூறப்படும் ஹெப்பால்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.