அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தொடங்கப்பட்ட வழக்கு… கோர்ட்டின் அதிரடி உத்தரவு…!!!
SeithiSolai Tamil December 20, 2024 04:48 AM

அதிமுகவை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி. சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்துள்ள வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் அதிமுக தொண்டர்கள் கட்சியின் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவில் கட்சியின் சட்ட விதிகள் திருத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் இவ்வழக்கின் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நிபந்தனையுடன் கட்சியின் திருத்தப்பட்ட விதிகளுக்கும் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்க பட்டதற்கும் அங்கீகாரம் அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் திருத்தப்பட்ட கட்சி விதிகளையும் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை மறு பரிசீலனை செய்ய கோரி தேர்தல் ஆணையத்திடம் மனுக்கள் அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

அந்த மனுக்களின் அடிப்படையில் நேரில் விளக்கம் அளிக்கவும் வழக்கு ஆவணங்களை அளிக்கவும் வாய்ப்பளித்து அவற்றை பரிசீலிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் மற்றும் ஸ்ரீ குமரப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நிலுவை வழக்குகள் முடிவைக்கு வரும் வரை அதிமுகவிற்கு ரெட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த மனுவை பரிசீலித்து 4 வாரங்களில் முடிவெடுக்க உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த வழக்கு விளம்பரத்திற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது என கூறிய நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.