ஓடிடியில் வெளியாகிறதா புஷ்பா 2..? எங்கே..எப்போ தெரியுமா ?
Newstm Tamil December 20, 2024 10:48 AM

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘புஷ்பா’. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

அல்லு அர்ஜுனின் திரையுலக பயணத்தில் ரூ.1500 கோடி வசூல் என்பது புதிய மைல்கல். மேலும் படம் ‘பாகுபலி 2’ படத்தின் மொத்த வசூலான ரூ.1800 கோடியை சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்த நிலையில், ’புஷ்பா2’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்தானத் தகவல் வெளியாகி உள்ளது. ஜனவரி 9 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்தத் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.