நியூ ஜெர்சியில் நடந்த 'மிஸ் இந்தியா யுஎஸ்ஏ – 2024' போட்டியில் பலர் கலந்து கொண்டனர். அவர்களில் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ – 2024 என்ற பட்டத்தை கெய்ட்லின் சாண்ட்ரா பெற்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியரான 19 வயது கெய்ட்லின் சாண்ட்ரா டேவிஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் கடந்த 14 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
அடுத்தடுத்த இடங்களை இல்லினாய்ஸைச் சேர்ந்த சன்ஸ்கிருதி ஷர்மா ' திருமதி இந்தியா யுஎஸ்ஏ' ஆகவும், வாஷிங்டனைச் சேர்ந்த அர்ஷிதா கத்பாலியா 'மிஸ் டீன் இந்தியா யுஎஸ்ஏ' ஆகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்போட்டியில் 47 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 3 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இது குறித்து கெய்ட்லின் சாண்ட்ரா , ' நான் ஆடை வடிவமைப்பாளராகவும், மாடலிங் மற்றும் நடிப்பு துறையில் ஜொலிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கல்வியறிவு இவைகளில் கவனம் செலுத்த விரும்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.