இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாட இருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த அஸ்வினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக நேற்று சென்னை திரும்பிய அஸ்வினுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது அஸ்வின் தந்தை ரவிச்சந்திரன் பிரபல செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்த போது என்னுடைய மகன் ஓய்வு அறிவித்தது எனக்கு மகிழ்ச்சி தான். அவர் ஓய்வை அறிவித்ததற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கும் நிலையில் அது அஸ்வினுக்கு மட்டும் தான் தெரியும். அவர் ஓய்வை அறிவித்ததற்கு அவமானங்கள் கூட காரணமாக இருக்கலாம் என்றார்.
இதன் காரணமாக அஸ்வின் ஓய்வு அறிவுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று அவருடைய ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இதன் காரணமாக அஸ்வின் ஒரு பதிவை போட்டுள்ளார். அதாவது தன்னுடைய தந்தை மீடியா அனுபவம் இல்லாதவர் என்றும், அவருடைய பேச்சை யாரும் பெரிது படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு என்ன அப்பா இது எல்லாம். என்னுடைய தந்தையை மன்னித்து விடுங்கள். அவரை தனியாக இருக்க அனுமதி கொடுங்கள் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அஸ்வின் தன்னுடைய முழு மனதுடன் விருப்பப்பட்டதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துள்ளதாக தெளிவுபடுத்தியுள்ளார்.