இதோ அதோ என்று இழுபறியாக இருந்து வந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் இலங்கை அல்லது துபாய் நாடுகளில் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வரப்படுகிறது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடக்க இருப்பதாகத் தெரிகிறது. 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடரை நடத்தும் வாய்ப்பு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்தது.ஆனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அட்டவணை கூட இதுவரை வெளியிடப்படவில்லை எனத் தெரிகிறது. இதற்கு பிசிசிஐயின் எதிர்ப்பு காரணமாக அமைந்துள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பிரச்சனையே இதற்கு மிகப்பெரிய காரணம்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. ஹைப்ரிட் மாடலின் கீழ் இந்த போட்டியை நடத்த ஐசிசி நடவடிக்கை எடுத்தது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானில் விளையாடுவதற்குப் பதில் வேறு ஏதேனும் நாட்டில் விளையாடும்.
இதற்கு முதலில் சம்மதிக்காத பாகிஸ்தான், ஐசிசியின் கடுமையான அணுகுமுறைக்குப் பிறகு ஒப்புக் கொண்டது. அதே சமயம் அடுத்து வரும் போட்டிகளில் இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்காது என்று பிடிவாதம் பிடித்தது. இரு நாடுகளுக்கும் பொதுவாக துபாய் அல்லது இலங்கையில் இந்த போட்டிகளை நடத்த பரிசீலனை செய்யப்படுகிறது. இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெறாது என ஐசிசி அறிவித்துள்ளது.