பிரிட்டனை சேர்ந்த 32 வயதுடைய ஜெசிக்கா ரிக்ஸ் என்ற பெண் நியூரோ-கிரானியோ- வெர்டபிரல்-சிண்ட்ரோம்-பிளஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இவர் தனது அரிய வகை நோய்க்கு சிகிச்சை எடுத்து வருகிறார். அதற்கு அதிகளவு பணம் தேவைப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்டுவதற்காக ஜெசிக்கா தனது தோழிகள் 16 பேருடன் சேர்ந்து நிர்வாணமாக காலண்டர் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
ஜெசிக்காவின் சிகிச்சைக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 27 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகிறது. தற்போது நிர்வாண காலண்டர்கள் மூலம் அவர்கள் 23 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் வரை திரட்டியுள்ளனர். அரியவகை நோய்க்கு சிகிச்சை எடுக்க வில்லை என்றால் ஜெசிக்கா பக்கவாத நோயால் பாதிக்கப்படுவார் என கூறப்படுகிறது.