கேரளா மாநிலத்தை ச் சேர்ந்த ஹரி மோகன் தாஸ் ஐஸ்வர்யா என்ற பெண்ணை பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டில் கல்லூரியில் படிக்கும் போது இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். 10 வருடங்களுக்கு முன்பு கல்லூரி நிகழ்ச்சியில் நண்பர்களுடன் இணைந்து ஹரி மோகன்தாசும் ஐஸ்வர்யாவும் நடனமாடியுள்ளனர். இப்போது இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் திருமண நிகழ்ச்சியிலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி நிகழ்ச்சியில் எப்படி நடனம் ஆடினார்களோ அதேபோல ஒரே பாடல் ஒரே நடன அசைவுகளுடன் ஆடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அந்த நடன வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதெல்லவா பத்து வருட சேலஞ்ச் என வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram