இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த நிலையில் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாட இருக்கிறார். அஸ்வின் சென்னை திரும்பிய நிலையில் அவருடைய தந்தை மற்றும் ரசிகர்கள் ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த அஸ்வின் தந்தை ரவிச்சந்திரன் தன்னுடைய மகன் அவமானப்படுத்தப்பட்டது தான் ஓய்வுக்கு காரணம் என்றும் அவருக்கு வாய்ப்புகள் வழங்காமல் மறுக்கப்பட்டுள்ளது எனவும் ஓய்வுக்கான காரணம் குறித்து அவருக்கு மட்டும் தான் தெரியும் எனவும் இன்னும் சில காலங்கள் என்னை பொறுத்தவரை அஸ்வின் விளையாடியிருக்கலாம் என்றும் கூறினார்.
தன்னுடைய மகன் அவமானப்படுத்தப்பட்டதால் தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக ரவிச்சந்திரன் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதற்கு காரணம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா தான் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி அவர்களை விளாசினார். இந்த நிலையில் அஸ்வின் தன்னுடைய தந்தையின் பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் என்னுடைய அப்பா மீடியாவில் பேசுவதற்கு பயிற்சி பெற்றவர் கிடையாது. டேய் அப்பா என்னடா இதெல்லாம். என்னுடைய அப்பா அறிக்கையை நீங்கள் பின்பற்றுவீர்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. அவரை மன்னித்து விடுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் தோனி கேப்டனாக இருந்தபோது அஸ்வின் எல்லா போட்டிகளிலும் விளையாடி வந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கேப்டனாக இருக்கும்போதே டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே விளையாட அழைக்கப்பட்டார். அவர் ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் பெரிய அளவில் விளையாடாத நிலையில் கடந்த சில வருடங்களாகவே அவர் தவிர்க்கப்படுவதாக குற்றச்சாட்டு இழந்த நிலையில் தற்போது அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் அஸ்வின் இன்னும் சில காலங்களுக்கு விளையாடி இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.