போடு செம..! சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் பெயர்… வெளியான அதிரடி அறிவிப்பு..!!
SeithiSolai Tamil December 20, 2024 05:48 PM

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஆல்ரவுண்ட் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் அஸ்வினுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்த அஸ்வின் சென்னை திரும்பிய போது அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வினின் பங்களிப்பை போற்றும் விதமாக தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் இணைச்செயலாளர் பாபா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஒரு ஸ்டாண்டுக்கு அஸ்வின் பெயர் விரைவில் சூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அஸ்வின் விளையாட இருக்கும் நிலையில் அவர் பயிற்சியாளராக கூட அடுத்து வர வாய்ப்புள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். மேலும் சிஎஸ்கே அகாடமியை இந்தியா முழுவதும் பரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.