பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த வருடம் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான், இந்தியா மற்றும் இங்கிலாந்து உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்கிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தானில் நடைபெறும் எந்த ஒரு போட்டியிலும் கலந்து கொள்ளாத நிலையில் இந்த முறையும் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டது. அதன் பிறகு இந்தியா விளையாடும் போட்டியை மட்டும் வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்று கேட்ட நிலையில் அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்த நிலையில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அதற்கு பாகிஸ்தான் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் தற்போது ஐசிசி இந்தியா பங்கிருக்கும் போட்டிகள் மட்டும் பாகிஸ்தானில் நடைபெறாது என்று தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோன்று 2024 முதல் 2027 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் நடைபெறும் எந்த ஒரு ஐசிசி போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியும் கலந்து கொள்ளாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாகிஸ்தானுக்குரிய ஆட்டங்கள் பொதுவான இடத்தில் நடைபெறும் என்றும் விரைவில் ஐசிசி சாம்பியன் டிராபி தொடர்கான அட்டவணை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.