மொசாம்பிக் சூறாவளி எதிரொலி.. 73 பேர் உயிரிழந்த சோகம்!
Dinamaalai December 20, 2024 10:48 PM

மொசாம்பிக் கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஒரு நாடு. இந்தியப் பெருங்கடல் பகுதியில் மடகாஸ்கர் அருகே அமைந்துள்ள மொசாம்பிக் நாட்டை சிடோ என்ற சூறாவளி தாக்கியது. புயல் மணிக்கு 26 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மேலும், நேற்று ஒரே நாளில் 250 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புயலால் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

 மேலும், புயல் மற்றும் மழையால் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொசாம்பிக் நாட்டை தாக்கிய சிடோ சூறாவளியில் சிக்கி 73 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக,  கபா டெல்கொடா மாகாணத்தில் மட்டும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். புயலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

புயல் கரையைக் கடந்துள்ளதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பெரும் புயலால் பலர் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.