இவர் என்ன உறங்குகின்றாரா…? டாக்டர். அம்பேத்கர் விவகாரத்தில் அமைதி காக்கும் இ.பி.எஸ்… அமைச்சர் ரகுபதி கேள்வி…!!!
SeithiSolai Tamil December 20, 2024 11:48 PM

அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதன சக்திகளுக்கு துணை போகும் விதமாக அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாயை மூடி கிடக்கின்றார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் அண்ணல் அம்பேத்கரை அவமரியாதை செய்த அமித்ஷாவை கண்டித்து நாடே கொந்தளித்து கிடைக்கின்றது. இதில் முதலமைச்சர் கடும் கண்டனத்தை பதிவு செய்ததோடு நாடு தழுவிய போராட்டத்தில் தி.மு.க-வும் பங்கெடுக்க வேண்டும் என உத்தரவிட்ட்டுள்ளார்.

அதன்படி திராவிட முன்னேற்ற கழகம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றது. மேலும் நாடாளுமன்ற வளாகத்திலும் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர். சட்ட மேதை, சமத்துவ போராளி, அண்ணல் அம்பேத்கருக்கு களங்கம் ஏற்படுத்த முயலும் சனாதான சக்திகளுக்கு துணை போகும் விதமாக அ.தி.மு.க பொது செயலாளரான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாய்மூடி கிடக்கின்றார்.

மேலும் மத்திய பா.ஜ.க அரசு மக்களாட்சியை அளிக்க கொண்டுவர துடிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி எதுவும் கூறாமல் அமைதி, இஸ்லாமிய சமூக மக்களை இழிவாக பேசிய நீதிபதி விவகாரத்திலும் அமைதி காத்து வருகின்றார். அது மட்டுமல்லாத அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்திய அமித்ஷாவை கண்டிக்க கூட வேண்டாம் “வலிக்காமல் வலியுறுத்தக் கூட மனமில்லாமல்” அமைதி, அமைதியோ அமைதி என ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றார். எடப்பாடி பழனிச்சாமி யார் கண்ணிலும் படாமல் பதுங்க குழியில் பதுங்கிக் கொண்டிருக்கும் இவரைக் கண்டால் யாரேனும் கேட்டு சொல்லுங்கள் அண்ணல் அம்பேத்கர் யார் என்றாவது அவருக்கு தெரியுமா என்று இவ்வாறு தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.