சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் ஓய்வை அறிவித்ததற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ஓய்வை அறிவித்து சென்னை திரும்பிய அவருக்கு ஏர்போர்ட்டில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதே சமயத்தில் இன்னும் சில காலங்கள் கூட அஸ்வின் சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ரசிகர்களுக்கு ஆறுதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்றாலும் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார்.
மீண்டும் மஞ்சள் ஜெர்சியில் அஸ்வினை காண ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இந்நிலையில் ஓய்வை அறிவித்த போது கபில்தேவ் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அஸ்வினுக்கு போன் போட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டை அஸ்வின் தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்து ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக நான் ஓய்வு பெறும் நாளில் என்னுடைய Call Log இப்படி இருந்திருக்கும் என 25 வருடங்களுக்கு முன்பு இப்படி நடக்கும் என்று யாராவது என்னிடம் கூறியிருந்தால் என்னுடைய இதயத்துடிப்பே நின்றிருக்கும். மேலும் சச்சின் டெண்டுல்கர் மற்றும் கபில்தேவ் ஆகியோருக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.