சிறந்த நடிகர் விஜய் சேதுபதி ...சிறந்த நடிகை சாய் பல்லவி..!
Newstm Tamil December 21, 2024 12:48 PM

சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12 முதல் டிசம்பர் 19 வரை நடைபெற்றது.  தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் நடத்தும் இந்த விழாவில் மொத்தம் 180 படங்கள் திரையிடப்பட்டன.  விழாவின் இறுதியில் சிறந்த படம், இயக்குநர், நடிகர், நடிகை  என பல விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி சிறந்த படம்: அமரன் - இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும், தயாரிப்பாளர் மகேந்திரனுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை  

சிறந்த படம்(இரண்டாம் இடம்): லப்பர் பந்து - இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து, தயாரிப்பாளர் லக்ஷ்மணன் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை  
சிறந்த நடிகர்: மகாராஜா திரைப்படத்துக்காக நடிகர் விஜய்சேதுபதிக்கு விருதுடன் ரூ. 50000  பரிசுத் தொகை
சிறந்த நடிகை: அமரன் திரைப்படத்துக்காக நடிகை சாய் பல்லவிக்கு விருதுடன் ரூ. 50000 பரிசு தொகை
சிறந்த துணை நடிகர்: தினேஷ்(லப்பர் பந்து)
சிறந்த துணை நடிகை: துஷரா விஜயன்(வேட்டையன்)

சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்(அமரன்)
மக்களுக்கு பிடித்த நடிகர்: அரவிந்த்சாமி(மெய்யழகன்)
மக்களுக்கு பிடித்த நடிகை: அன்னா பென்(கொட்டுக்காளி)
சிறந்த பொழுதுபோக்குப் படம்: வேட்டையன்
சிறந்த கதை: நித்திலன் சாமிநாதன்(மகாராஜா)

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.