“43 வருஷத்தில் 12 முறை விவாகரத்து 12 முறை திருமணம்”… அரசாங்கத்தையே அலறவிட்ட 73 வயது பெண்… இப்படி ஒரு தில்லாலங்கடி வேலையா..?
SeithiSolai Tamil December 21, 2024 02:48 PM

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடந்த 1981 ஆம் ஆண்டு திருமண நடைபெற்ற நிலையில் அவருடைய கணவர் இறந்துவிட்டதால் பின்னர் அந்த நாட்டின் அரசாங்கத்திடமிருந்து கைம்பெண் ஓய்வூதியத்தை பெற்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு இரண்டாம் திருமணம் நடைபெற்ற நிலையிலும் தொடர்ந்து அந்த ஓய்வூதியத்தை அவர் பெற்றுள்ளார். அந்தப் பெண் கடந்த 1982 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் திருமணத்திற்கு பிறகும் ஓய்வூதியம் பெறுவது அரசாங்கத்திற்கு தெரிய வந்ததால் அந்த ஓய்வூதியத்தை கொடுப்பதை நிறுத்திவிட்டனர். இதன் காரணமாக அந்த பெண் மீண்டும் அந்த பணத்தை பெற விரும்பி தன் கணவரை விவாகரத்து செய்து பின்னர் அரசாங்கத்திடம் விண்ணப்பித்து அந்த ஓய்வூதியத்தை பெற்றார். பின்னர் அரசாங்கத்திற்கு தகவல் தெரிவிக்காமல் அந்த நபரை மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த நிலையில் இந்த விவகாரம் அரசாங்கத்திற்கு தெரிய வரவே ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக அந்த பெண் மீண்டும் தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு ஓய்வூதியம் பெற்றுள்ளார்.

இதேபோன்று அந்தப் பெண் தன் கணவரை 12 முறை விவாகரத்து செய்து 12 முறை மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்படி கிட்டத்தட்ட 43 வருடங்களாக 3 வருடங்களுக்கு ஒரு முறை விவாகரத்து செய்வது மீண்டும் திருமணம் செய்வதும் என்று வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் அரசாங்கம் ஓய்வூதியத்தை நிறுத்தியதால் மீண்டும் 13வது முறை தன் கணவரை விவாகரத்து செய்துள்ளார். பின்னர் அரசு அதிகாரிகள் விசாரிக்கவே கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக வாழ்வது தெரிய வந்ததால் ஓய்வூதியத்தை முற்றிலும் அரசு நிறுத்தியதால் அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர கடந்த 2023 ஆம் ஆண்டு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் அந்தப் பெண்ணுக்கு 73 வயது ஆகும் நிலையில் இதுவரை 3,42,000 டாலரை ஓய்வூதியமாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.