கூகுளில் நிர்வாக ரீதியாக பணியாற்றி வரும் ஊழியர்களில் (இயக்குனர், துணைத் தலைவர்) பொறுப்புகளில் உள்ள சுமார் 10 சதவீதம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நிறுவன செயல்பாடு, செயல் திறனை மேம்படுத்தவும் AI ஆதிக்கத்தால் டெக் துறையின் சவால்களை சமாளிக்கவும் இந்த முடிவு என சுந்தர் பிச்சை விளக்கம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் சுமார் 12,000 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.