இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!
Top Tamil News December 21, 2024 06:48 PM

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.56,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தினமும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. கடந்த திங்கள் கிழமை தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. செவ்வாய் கிழமை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57,200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் புதன் கிழமை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.57,080க்கு விற்பனை செய்யப்பட்டது. வியாழக்கிழமை ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.56,560க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் ரூ.56,320க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 7,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.99 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.