கார் ஓட்டுநர் பயிற்சி அளிக்கும் போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சமத்துவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பத்தொன்பது வயதான கல்லூரி மாணவி ஒருவர், அதே பகுதியில் உள்ள கார் ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் கார் ஓட்டும் பயிற்சிக்கு சென்று வந்தார்.
அங்கு அந்த பெண்ணுக்கு திருவேற்காட்டை சேர்ந்த செல்வம் என்ற சித்திரை செல்வம் என்பவர் கார் ஓட்டுவதற்கு பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில், செல்வம் கார் ஓட்ட பயிற்சி அளிக்கும்போது, கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சம்பவம் குறித்த போலீசில் புகார் அளித்தது. அந்தப் புகாரின் பேரில் அண்ணாநகர் மகளிர் போலீசார் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.