உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி வழங்க நடவடிக்கை: அமைச்சர் சேகர்பாபு
Webdunia Tamil December 21, 2024 06:48 PM



திருப்போரூர் முருகன் கோயிலில் உண்டியலில் பக்தர் ஒருவரின் ஐபோன் தவறி விழுந்த நிலையில், அந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம் என கோயில் நிர்வாகம் பக்தரிடம் கூறியதாக நேற்று தகவல் வெளியானது. இந்த நிலையில் உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோனை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம், தினேஷ் என்பவரின் ஐபோன் தவறுதலாக உண்டியலில் விழுந்திருந்த நிலையில், உண்டியலை எண்ணும் போது போன் இருந்ததை கண்டறிந்த கோயில் நிர்வாகத்தினர், உரிமையாளர் தினேஷை அழைத்தனர். அப்போது, "போன் முருகனுக்கே சொந்தம், அதில் உள்ள டேட்டாக்களை மட்டும் வேறு போனில் மாற்றிக் கொள்ளுங்கள்," என்று நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த பக்தரின் ஐபோன் தொடர்பாக அறநிலையத்துறை விதிகளை ஆய்வு செய்து, சாத்தியமென கூறப்பட்டால் செல்போனை திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.

Edited by Mahendran
© Copyright @2024 LIDEA. All Rights Reserved.