அஜித்துக்கு வில்லனாக எப்போது? விஜய்சேதுபதி சொன்ன சுவாரஸ்ய தகவல்
CineReporters Tamil December 21, 2024 06:48 PM

ajithvijaysethupathi

ajithvijaysethupathi

விஜய்சேதுபதி:

விஜய்சேதுபதி ஒரு நடிகருக்கு வில்லனாக நடிக்கிறார் என்றால் அந்தப் படத்தின் மீது ஒரு பெரிய ஹைப் ஏற்பட்டு விடுகிறது. அந்தளவுக்கு விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க வேண்டும் என ரசிகர்களும் விருப்பப்படுகின்றனர். சேதுபதி, நானும் ரவுடிதான், 96 என ஹீரோவாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த விஜய்சேதுபதி பேட்ட படத்தின் மூலம் முதன் முதலில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருப்பார்.


ஆனால் பேட்ட படத்தில் அவருடைய வில்லனிசம் பெரிய அளவு எடுபடவில்லை என்றாலும் மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக மாஸ் காட்டியிருப்பார். ஏற்கனவே விஜய்க்கு இருக்கும் ஃபேன்ஸ் ஃபாலோயர்ஸ்களுக்கு விஜய்சேதுபதி சேதுபதி வில்லனாக நடித்தது அவருக்கு மேலும் கூடுதல் பலமாக அமைந்தது. விஜய்ரசிகர்களும் விஜய்சேதுபதியை வரவேற்கத் தொடங்கினார்கள்.

அஜித்துக்கு வில்லனாக எப்போது?:

சொல்லப்போனால் அடுத்தடுத்து விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க ரசிகர்களின் ஆதரவுதான் காரணமாக அமைந்தது. இதன் உச்சக்கட்டம்தான் விக்ரம் திரைப்படம். அந்த படத்தில் கமலையே ஒரு சீனில் புரட்டி எடுத்திருப்பார் விஜய்சேதுபதி. இப்படி தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோக்களான ரஜினி, விஜய், கமல் இவர்களுக்கு வில்லனாக நடித்த விஜய்சேதுபதி ஏன் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவில்லை என்ற கேள்வி அனைவருக்குள்ளும் இருந்தது.

நான் ரெடிதான்.. ஆனா?:

அதற்கான பதிலை இப்போது விஜய்சேதுபதி கூறியிருக்கிறார். முதன் முதலில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கத்தான் வாய்ப்பு வந்ததாம். பேட்ட படத்திற்கு முன்பாகவே அஜித்துக்கு வில்லனாக நடிக்கத்தான் விஜய்சேதுபதிக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. அதுக்கு விஜய்சேதுபதியும் ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் அஜித் தரப்பிலிருந்து எந்தவித பதிலும் வரவில்லையாம். கிணத்துல போட்ட கல்லா அந்தப் பக்கம் அமைதியா இருந்துட்டாங்க என விஜய்சேதுபதி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.


வில்லனாக மாஸ் காட்டி வந்த விஜய்சேதுபதி மகாராஜா படத்தின் மூலம் மீண்டும் தன் ஹீரோயிசத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறார். சீனா வரை அவரின் புகழ் கொடிகட்டி பறக்கிறது. இப்போது விடுதலை 2 படம் வெளியாகி மீண்டும் விஜய்சேதுபதியின் புகழ் உச்சத்தை அடைந்திருக்கிறது.

Also Read:

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.