மதுரையில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக கள ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு, தற்போது 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான கள ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மதுரையில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக கள ஆய்வு நடத்தப்பட்டது. சென்னை மெட்ரோ திட்ட இயக்குநர் உள்ளிட்டோர் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டனர். மதுரை ரயில் நிலையத்தில் இருந்து ஜெய்ஹிந்த்புரம், ஆண்டாள்புரம் வரை கள ஆய்வு நடக்கிறது. மெட்ரோ சுரங்கம் அமைப்பதற்கான சாத்திய கூறுகளை அர்ஜூனன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.