தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம்தோறும் 15ஆம் தேதி மகளிர் உரிமைத்தொகை பணம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் இந்த மாதம் மகளிர் உரிமைத்தொகை பலருக்கு வரவில்லை என்று குற்றசாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் த.மோ. அன்பரசன் ஒரு முக்கிய தகவலை கூறியுள்ளார். இதுபற்றி நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது, அரசு கஜானாவில் பணம் இல்லை. தட்டுப்பாடாக இருப்பதால் தற்போது தலைவர் (முதல்வர் ஸ்டாலின்) பணத்தை ரெடி பண்ணிக்கிட்டு இருக்காரு. மேலும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் விரைவில் அனைவரது வங்கி கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்று கூறினார்