குட் நியூஸ்..! செறிவூட்டப்பட்ட அரிசி ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைப்பு..!
Newstm Tamil December 22, 2024 12:48 PM

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடந்தது. மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, பல்வேறு மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
 

இக்கூட்டத்திற்கு பிறகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது:
 

*செறிவூட்டப்பட்ட அரிசி மீதான ஜி.எஸ்.டி. 12ல் இருந்து 5 சதவீதம் ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
 

*ஜீன் தெரபி சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு
 

*சர்வதேச அணுசக்தி அமைப்புக்கு ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்கு
 

*அரசு திட்டங்கள் மூலம் இலவசமாக தரப்படும் உணவுகளின் மூலப்பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது.

*மிளகு மற்றும் உயர்ந்த திராட்சை ஆகியவற்றை விவசாயிகள் விற்பனை செய்தால் ஜி.எஸ்.டி. கிடையாது. வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்தால் ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
 

*சிறு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., வரி துறையில் பதிவு செய்யும் நடைமுறையை எளிமையாக்க நடவடிக்கை
 

*வங்கி கடன் பெற்றவர்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்வதன் மூலம் விதிக்கப்படும் அபராதத்தின் மீது எந்த ஜி.எஸ்.டி.,யும் இல்லை.
 

*விமானங்களுக்கான எரிபொருள் ஜி.எஸ்.டி., வரி வரம்பிற்குள் வரவில்லை. விமான எரிபொருளை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வரும் பரிந்துரையை மாநிலங்கள் எதிர்த்தன.
 

*புட் ஹோம் டெலிவரி சேவை மீது ஜி.எஸ்.டி., விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.
 

* 50 சதவீதத்திற்கும் மேல் சாம்பல் உள்ள ஏசிசி பிளாக்குகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி.,
 

*மருத்துவக் காப்பீடு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவிற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.