பிக் பாஸ் 8: அவன் இடத்துல வேற யாராச்சும் இருந்துருந்தா.. முத்துவுக்காக கண்ணீர் விட்ட சவுந்தர்யா..
Tamil Minutes December 22, 2024 12:48 PM

பிக் பாஸ் நிகழ்ச்சி என வந்து விட்டால் வார இறுதி வரும் போது தான் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பும், உற்சாகமும் அதிகமாக இருக்கும். இதற்கு காரணம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிரபலங்கள் அந்த நாட்களில் வந்து அனைத்து போட்டியாளர்களிடமும் கடுமையாக நடந்து கொள்வதுடன் அவர்களது தவறுகளையும் சுட்டிக்காட்டி எச்சரிக்கை கொடுப்பார்.

அந்த வகையில் நடப்பு பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி, யாருக்கும் ஆதரவாக இல்லாமல் தவறை யார் செய்தாலும் உடனடியாக கேள்வி கேட்டு நேரடியாக அவர்களை விமர்சிக்கவும் செய்வார். கமலுக்கு நிகராக விஜய் சேதுபதியும் போட்டியாளர்களை லெப்ட் ரைட் வாங்கி வருவதால் சனி, ஞாயிறுக்கிழமைகளை எண்ணி ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த வாரம் நடந்த பிசிக்கல் டாஸ்க் தொடங்கி முத்து மற்றும் பவித்ரா ஆகியோரின் கேப்டன்சி டாஸ்க் பிரச்சனை உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி விஜய் சேதுபதி நிச்சயம் போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அது பற்றி நிறைய விஷயங்களை விஜய் சேதுபதி போட்டியாளர்களிடம் பேசியும் வருகிறார்.

இதனிடையே, கேப்டன்சி டாஸ்கில் பிக் பாஸ் முடிவால் முத்துக்குமரன் உடைந்து அழுது பல நூறு முறை மன்னிப்பும் கேட்டு விட்டார். இது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பலருக்கும் வேதனையை கொடுக்க, சவுந்தர்யாவும் இதனால் மனமுடைந்து போனதாக தெரிகிறது.

இதனிடையே, முத்துவின் செயலால் கேப்டன்சி டாஸ்க் மற்றும் நாமினேஷன் ப்ரீ பாஸ் நிறுத்தப்பட்டது பற்றி சவுந்தர்யா மற்றும் ரயான் ஆகிய இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் சவுந்தர்யா, “எனக்கே கண்ணுல கண்ணீர் வந்துடுச்சு. ஏன்னு எனக்கே தெரியல. நான் ரொம்ப எமோஷனலான ஒரு ஆள் தான். ஆனால் அந்த உருக்கம் நிச்சயமா எல்லார்கிட்டயும் இருக்காது. ஒரு வேளை அந்த இடத்தில் முத்து இருந்ததால தான் நான் அப்படி மனசு உடைஞ்சு போயிருக்கலாம்” என கூறுகிறார்.

இதன் பின்னர் பேசும் ரயான், “முத்து இல்லை. அந்த இடத்தில் வேறு யார் இருந்திருந்தாலும் நீ எமோஷனல் ஆகி இருப்பாய். நீ இப்போது சும்மா சொல்லலாம். இந்த வீட்டில் நீ அனைவருடனும் 75 நாட்களுக்கு மேல் இருந்திருக்காய். தெரிந்தோ, தெரியாமலோ அவர்கள் மீது உனக்கொரு கருத்து இருந்திருக்கும். உன் மனதில் அவர்களுக்கு ஒரு இடம் இருக்கலாம்.

அது அவர்களை பிடித்தோ, பிடிக்காமலோ கூட இருக்கலாம்” என்கிறார். ஆனால், அப்படி இல்லை என்றும் முத்து என்பதால் தான் எமோஷனல் ஆனதாகவும் சவுந்தர்யா தனது விளக்கத்தையும் முன் வைக்கிறார்.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.