பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ராஜ மித்ரா. இவர் 5 தேசிய விருதுகளை வென்ற தயாரிப்பாளர். இவருக்கு 79 வயது ஆகும் நிலையில் தற்போது காலமானார். இவர் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு கொல்கத்தாவில் காலமானார். இவர் ஏக்தி ஜிபான் என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.
இந்த படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும் இதேபோன்று இவர் 5 தேசிய விருதுகளை வென்றுள்ள நிலையில் அவர் உயிரிழந்த செய்தியை மகன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் அவருடைய மறைவுக்கு தெலுங்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.