பிக் பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து நடைபெறும் நிலையில் 60 முதல் 70 நாட்களை கடந்து விட்டால் அது போகும் போக்கை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு போட்டியாளர்களும் அடுத்த 30 முதல் 40 நாட்களை அந்த வீட்டில் கழிக்க வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு இறங்கி தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்த முடியுமோ அதற்கான முயற்சிகள் அனைத்திலும் ஈடுபடுவார்கள்.
அப்படி ஒவ்வொருவரும் தங்களது திட்டங்களை வகுக்க முயற்சிக்கும் போது நிச்சயம் அதில் ஏராளமான சண்டைகள் உருவாகும். இதற்கு சிறந்த உதாரணமாக சமீபத்தில் கூட முத்துக்குமரன் மற்றும் பவித்ரா ஆகியோர் கேப்டன்சி டாஸ்கில் ஏற்பட்ட சம்பவத்தை சொல்லலாம். இது தவிர ஒவ்வொரு போட்டியாளர்களும் மற்றவர்களிடம் பார்க்கும் ஏதாவது ஒரு குறைகளை பெரிய பூதாகரமாக மாற்றி அதனை சண்டை வரை கொண்டு போகவும் முயற்சி செய்வார்கள்.
இது இயல்பாக நடந்தாலும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் ஒரு வீட்டில் பெரிய பிரச்சனையாக தான் மாறிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் கடந்த சில தினங்களாகவே ஜாக்குலின் ரசிகர்களின் மனதை அறிந்து ஒவ்வொரு வாரமும் செயல்படுகிறார் என்றும் யார் அதிக கைதட்டல்களை வாங்குகிறார்களோ அவர்களுடனே நட்பு பாராட்டி தானும் பாதுகாப்பாக ஆடி வருகிறார் என்றும் ஒரு குற்றச்சாட்டு பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் பவித்ராவும் இது பற்றி சில விளக்கங்களை கொடுத்துள்ளார். அன்ஸிதாவிடம் பேசும் பவித்ரா, “ஜாக்குலின், தீபக் அண்ணாவிடம் திடீரென நட்பாக இருக்கிறார். மேலும் அவர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி செய்கிறார்” என பவித்ரா சொல்கிறார். உடனே பேசும் அன்ஸிதா, “எனது மூளை அதனை வேறு மாதிரி யோசிக்கிறது. அதை நான் சொல்ல வேண்டாம் என்று நினைக்கிறேன்” என்றும் தெரிவிக்கிறார்.
இதன் பின்னர் ஜாக்குலினின் கேம் பற்றி பேசும் பவித்ரா, “திடீரென இப்படி ஜாக்குலின் ஏன் ஆடுகிறார் என்பது தெரியவில்லை. ஒருவேளை வார இறுதியில் தீபக் அண்ணாவிற்கு கைதட்டல்கள் அதிகம் கிடைப்பதனால் இருக்குமோ?” என்றும் பவித்ரா கேட்க, அதுதான் காரணம் என்றும் ஆமோதிக்கிறார் அன்ஸிதா. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஆர்ஜே ஆனந்தி, ஜாக்குலின் வார இறுதியில் அதிகம் கவனிக்கப்படும் போட்டியாளர்களுடன் நட்பாக இருப்பார் என்பதை ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுருந்தார்.
அப்படி இருக்கையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆடி வரும் பவித்ராவும் அதனை கவனித்து கருத்துக்களை அன்ஸிதாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிலேயே ஜாக்குலின் தான் சிறந்த போட்டியாளர் என்றும் அவருக்கு ஆதரவான ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் மற்றவர்கள் பேசும் வதந்தி எதுவும் அவரை பாதிக்காது என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.