சுற்றுலா சென்ற இடத்தில் விபரீதம்.. கடலில் மூழ்கி பள்ளி முதல்வர் உயிரிழந்த சோகம்!
Dinamaalai December 30, 2024 04:48 AM

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் ஹவேலி தாலுகாவில் உள்ள மகாத்மா ஜோதிராவ் உயர்நிலைப் பள்ளியின் முதல்வராக இருந்தவர் தர்மேந்திர தேஷ்முக். இவர் பள்ளி ஆசிரியர்களுடன் ராய்காட் மாவட்டத்தில் உள்ள காசித் கடற்கரைக்கு சுற்றுலா சென்றிருந்தார். நேற்று முன்தினம் மாலை கடலுக்குள் சென்று குளித்தனர்.

அப்போது பள்ளி முதல்வர் தர்மேந்திர தேஷ்முக் திடீரென கடல் அலையில் சிக்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. தகவலின் பேரில் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் போராடி பள்ளி முதல்வரை மீட்டனர். உடனடியாக அவரை போரிவிலியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அலிபாக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.