இந்தியாவில் உள்ள அனைவரும் இன்று புத்தாண்டை மகிழ்ச்சியாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வருகிறார்கள். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திலும் நம் நாட்டு ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி ஜம்மு காஷ்மீரில் மைனஸ் டிகிரியில் கடும் குளிருக்கு மத்தியிலும் நம் நாட்டு ராணுவ வீரர்கள் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி கரடு முரடான நிலப்பரப்பில் பனி நிறைந்த பகுதியில் அந்தக் கடும் குளிரையும் தாங்கி இந்திய மக்களைக் காக்க எல்லையில் கம்பீரமாக ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த வீடியோவை ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய ராணுவத்தினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.