நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியது முதல், திமுகவுக்கும், அக்கட்சிக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை, பழவந்தாங்கல் மற்றும் பரங்கிமலை பகுதியில் புத்தாண்டு மற்றும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகி வால் போஸ்டர் ஒட்டியுள்ளார்.
அப்போது வால்போஸ்டர் ஒட்டிய கட்சியினரை தடுத்து நிறுத்திய பழவந்தாங்கல் போலீசார், அவர்கள் வைத்திருந்த போஸ்டரை பறிமுதல் செய்து, அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும், விஜய் புகைப்படம் இருக்கக்கூடிய எந்த வால்போஸ்ட்ரையும் ஒட்டக்கூடாது என்று, துணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளதாக போலீசார் தெரிவித்ததாகவும், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியிருப்பதாக தெரிய வருகிறது.
இது குறித்து அக்கட்சியை சேர்ந்த லயோலா மணி தனது சமூக வலைதள பக்கத்தில் விடுத்துள்ள கண்டன செய்து குறிப்பில், "நீங்கள் அடக்க அடக்க நாங்கள் வளர்ந்து கொண்டே இருப்போம். உங்கள் அடக்குமுறைகளை முறைகளை கண்டு பயம் கொள்ளும் கோழைகள் அல்ல, உங்களை முட்டி வீழ்த்தப் போகும் யானைகள். களத்தில் சந்திப்போம், எதிர் அணியினருக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" என்று பதிலடி கொடுத்துள்ளார்.