டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், புத்தாண்டு வாழ்த்துகள். சிறுவயதில் இருந்தே புத்தாண்டு தினத்தில் கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு நல்ல மற்றும் புதிய ஒன்றைத் தொடங்க நாங்கள் அனைவரும் தீர்மானம் செய்கிறோம்.
2025 ஆம் ஆண்டின் முதல் நாளில், நேர்மையற்ற மற்றும் வஞ்சகமான அரசியலை கைவிட்டு, அர்த்தமுள்ள மாற்றத்தை கொண்டுவர கெஜ்ரிவால் பாடுபடுவார் என்று நம்புகிறேன். கெஜ்ரிவால் தனது குழந்தைகளின் பெயரில் சத்தியம் செய்யக்கூடாது.
மதுபானத்தை ஊக்குவித்ததற்காகவும் யமுனை நதியை சுத்தம் செய்வதாக தவறான உறுதிமொழிகளை வழங்கியதற்காகவும் மன்னிப்பு கேட்க வேண்டும். டெல்லியின் பெண்கள், பெரியவர்கள் மற்றும் மத சமூகங்களின் உணர்வுகளுடன் விளையாடும் வகையில், பொய் வாக்குறுதிகளை அளிப்பதை ஆம் ஆத்மி தலைவர் நிறுத்துவார்.
அரசியலுக்காக தேச விரோத சக்திகளின் நன்கொடைகளை திரட்டவோ அல்லது ஏற்கவோ மாட்டார் என்று நம்புகிறேன். நீதியின் பாதையில் நடக்க கடவுள் உங்களுக்கு பலம் தரட்டும் என்றுத் தெரிவித்தார்.