கர்நாடக மாநிலத்தில் பொம்மனஹால் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் ஆந்திர மாநிலத்தில் மெட்டக்கால் கிராமம் அமைந்துள்ளது. இந்நிலையில் பொம்மனஹால் கிராமத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவர் ஒரு எருமை மாட்டை கிராமத்து தேவதைக்கு பலி கொடுப்பதாக கூறி வளர்த்து வருகின்றார். இந்த மாட்டிற்கு 5 வயது ஆகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த எருமை மாடு காணாமல் போன நிலையில் அதனை யாரோ சிலர் திருடி விட்டதாக கூறி அந்த மாட்டை விவசாயி தேடி வந்துள்ளார். அப்போது அந்த மாடு மெட்டக்கால் கிராமத்தில் இருப்பது தெரிய வந்தது.
அதன் பிறகு அவர் தன்னுடைய அந்த எருமை மாட்டை அழைத்து வர முயற்சி செய்துள்ளார். அதற்கு கிராம மக்கள் கடும் எதற்கு தெரிவித்ததோடு இந்த எருமை மாடு எங்களுக்கு சொந்தமானது எங்களுடைய கிராம தேவதைக்கு பலி கொடுப்பதற்காக நாங்கள் வளர்த்து வருகின்றோம் என்று கூறியுள்ளனர். மேலும் அதனுடைய தாய் மாடும் எங்களிடம் தான் இருக்கின்றது என்று கூறி மாட்டை திருப்பி அனுப்புவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த விவசாயி மாடு எனக்கு சொந்தமானது என அடம் பிடிக்கின்றார்.மேலும் விவசாயி தன்னுடைய கிராம மக்களை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இறுதியில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் காவல்துறையினராலும் இவர்களுடைய பிரச்சனைக்கு தீர்வு காண முடியவில்லை. ஒரே ஒரு எருமை மாட்டிற்கு இந்த அக்கப்போரா என்னும் வகையில் இப்பிரச்சனை நீண்டு கொண்டே போகின்றது.