வேலூர் மாவட்டத்திலுள்ள தென்புதூர் கிராமத்தில் ஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இதில் கட்டிட தொழிலாளியான இவர் பெரிய நகரங்களுக்கு சென்று கட்டுமான பணிகளை செய்து வந்துள்ளார். இவருக்கு 33 வயது ஆகின்ற நிலையில் இன்னும் திருமணம் ஆகாததால் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இவரது குடும்பத்தினர் அனைவரும் கட்டிட வேலைக்காக திருப்பூர் வந்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பூர் சென்ற அவருடைய அம்மா கல்யாணி ஆனந்தனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த கல்யாணி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் என்னவென்று பார்க்குமாறு கூறியுள்ளார். பின்னர் அவர்கள் சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.
ஆகவே ஜன்னல் வழியாக பார்த்த போது ஆனந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்ற அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஆனந்தனின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் திருமணம் ஆகாத காரணத்தினால் தனிமையில் மன அழுத்தத்தில் இருந்து வந்த ஆனந்தன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக இதை போன்று தூக்கு மாட்டி உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முயற்சித்துள்ளார். அப்போது அவரை குடும்பத்தினர் காப்பாற்றி விட்டனர்.