ஆரணி அருகே தனது நடத்தையில் சந்தேகபட்ட மாமியாரின் கழுத்தைறுக்கி கொலை செய்த மருமகள் 20நாள் கழித்து பிரேத பரிசோதனை சான்றிதழில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே காளசமுத்திரம் ஊராட்சிக்குபட்ட ராமன் கோவிந்தம்மாள் தம்பதியினருக்கு சிராலன்(35) என்ற மகனும் ராஜலட்சுமி ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். மேலும் ராஜேஸ்வரி அதே கிராமத்திலும் ராஜலட்சுமி வேலூரிலும் திருமணமாகி வாழ்ந்து வருகின்றனர். இதில் மகன் சிராலனுக்கு கடந்த 5வருடம் முன்பு திருமாணமாகி தேவிகலா(24) என்ற மனைவியும் ஹரினி(4) என்ற மகளும் ஹரிகரன் என்ற மகனும்(1) உள்ளனர். மேலும் சில வருடங்களுக்கு முன்பு ராமன் இறந்து விட்டார். மகன் சிராலன் ராணுவத்தில் பணிபுரிவதால் கோவிந்தம்மாள் தனது மருமகள் தேவிகலாவுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவிந்தம்மாளின் 2 மகளுக்கு குழந்தையில்லாத காரணத்தினால் தேவிகலாவிற்கு மட்டும் எப்படி 2 குழந்தைகள் பிறந்துள்ளன எனக் கூறி அடிக்கடி மாமியார் மருமகளுக்கு சண்டை ஏற்படுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர். இது சம்மந்தமாக கண்ணமங்கலம் காவல்நிலையத்தில் இருதரப்பினரும் புகார் அளித்து சமரசமாக சென்றுள்ளதாக கூறப்படுகின்றன. இதனையடுத்து கடந்த 09.12.24 அன்று மீண்டும் மாமியார் கோவிந்தம்மாள், தேவிகலாவிடம் 2 குழந்தைகள் எப்படி பிறந்துள்ளன என கூறி நடத்தையில் சந்தேகம் உள்ளது என சண்டை போட்டுள்ளார். இதில் இருதரப்பினரிடையே கைகலப்பாக மாறியுள்ளன. அப்போது ஆத்திரமடைந்த மருமகள் தேவிகலா தனது நடத்தையில் சந்தேகபட்ட மாமியார் கோவிந்தம்மான்(55) கழுத்தை நெரித்து தாக்கியுள்ளார். இதில் கோவிந்தம்மாள் மயக்கமடைந்துள்ளார். இதனால் உடனடியாக அருகில் இருந்த கோவிந்தம்மாளின் மகள் ராஜேஸ்வரியை அழைத்து மாமியார் கோவிந்தமாள் தரையில் தடுக்கி விழுந்து மயக்கமடைந்ததாகவும் கூறியதால் தேவிகலா ராஜேஸ்வரி ஆகியோர் கோவிந்தம்மாளை வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். மேலும் இதில் கோவிந்தம்மாள் சிகிச்சை பலனின்றி உயிரழந்தார்.
கோவிந்தம்மாளின் இறப்பில் மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தனர். பின்னர் சுமார் 20நாட்கள் கழித்து கோவிந்தம்மாள் கழுத்து நெரித்து இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை சான்றிதழில் திடுக்கிடும் தகவலாக வெளிவந்தன. மேலும் தனியார் மருத்துவமனை புகாரின் பேரில் கண்ணமங்கலம் போலீசார் வழக்குபதிந்து மருமகள் தேவிகலா(24) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தேவிகலா நடந்ததை கூறி கொலை செய்துள்ளது ஓப்பு கொண்டதன் பேரில் கொலை வழக்காக பதிவு செய்து போளுர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தனது நடத்தையில் சந்தேகபட்ட மாமியாரை கொலை செய்த மருமகள் சம்பவத்தால் அந்த கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.