செல்போனில் அலறிய காதலி…. பதறிபோய் தேடி சென்ற வாலிபருக்கு ஷாக்…. வெளியான பகீர் தகவல்கள்….!!
SeithiSolai Tamil January 06, 2025 03:48 AM

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்பைநல்லூர் சமத்துவபுரத்தில் கூலி வேலை பார்க்கும் மாதேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகனும், 10 வயதில் மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் தீபாவிற்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் மிதுன் சக்கரவர்த்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால் கணவன் மனைவிக்குஇடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் தீபா குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கச்சனூர் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இதற்கிடையே குடிப்பழக்கத்திற்கு அடிமையான மாதேஷ் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். தீபா வேலைக்கு சென்று வந்த போது கௌதம் என்பவருடன் பழகியுள்ளார். இதனை அறிந்த மிதுன் சக்கரவர்த்தி தீபாவிடம் சண்டை போட்டுள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மிதுன் சக்கரவர்த்தி கோபத்தில் தனது நண்பருடன் இணைந்து தீபாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். முன்னதாக இரண்டு பேர் தன்னை பின் தொடர்வதாக தீபா செல்போன் மூலம் கௌதமிடம் கூறியுள்ளார்.

அதன் பிறகு இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் கௌதம் தொடர்பு கொண்ட போது தீபாவின் அலறல் சத்தம் மட்டும்தான் கேட்டுள்ளது. இதனால் பதறிப்போன கௌதம் தீபாவை தேடி சென்றார். அப்போது கத்திக்குத்து காயங்களுடன் தீபா இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான மிதுன் சக்கரவர்த்தியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.