தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விரக்தி.. யமுனை நதியில் குதித்த சிறுமி.. பத்திரமாக மீட்ட போலீசார்!
Dinamaalai January 06, 2025 03:48 AM

தலைநகர் டெல்லியில் உள்ள ரூப்நகர் காவல் நிலையத்திற்கு ஒரு பெண் தனது 15 வயது மகள் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. சிறுமியின் அறையில் இருந்து தற்கொலைக் கடிதமும் மீட்கப்பட்டது.

இதையடுத்து ஏசிபி வினிதா தியாகி தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில்  15 வயது சிறுமி ஒருவர் யமுனை ஆற்றில் குதித்தது போலீசாருக்கு தெரியவந்தது.

உடனே ஒரு போலீஸ்காரரும், பிரிஜேஷ் குமார் என்ற நபரும் ஆற்றில் குதித்து சிறுமியை உயிருடன் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர், சிறுமிக்கு உரிய ஆலோசனை வழங்கிய டெல்லி போலீசார், சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.