திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கைது - அண்ணாமலை கண்டனம்!
Top Tamil News January 06, 2025 03:48 PM

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் பழனி கனகராஜ் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மதுக்கடையை காலை 8 மணிக்கே திறந்து வைத்து மது விற்பனை செய்ததை பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் பழனி கனகராஜ் அவர்கள், ஊடகங்களின் முன்னிலையில் அம்பலப்படுத்தியதற்காக அவரை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இன்று அவசர அவசரமாகக் கைது செய்திருக்கிறார்கள். இந்த கைது சம்பவம் வன்மையான கண்டனத்துக்குரியது. மக்களுக்கு அரணாகச் செயல்பட வேண்டிய திமுக அரசு சாராய வியாபாரிகளுக்கு அரணாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  

தமிழகக் காவல்துறையும் திமுகவின் ஒரு பிரிவு போல் செயல்படாமல் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். கைது செய்யப்பட்ட திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் பழனி கனகராஜ் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.