தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் ஜனவரி 14-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதன் பிறகு பாலமேட்டில் ஜனவரி 15ஆம் தேதியும், அலங்காநல்லூரில் ஜனவரி 16ஆம் தேதியும் போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான முகூர்த்தகால் நடப்பட்ட நிலையில் போட்டியை நடத்துவதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் நடத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் அதில் பங்கேற்கும் காளைமாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவுகள் இன்று முதல் தொடங்குகிறது. இன்று மாலை 5 மணிக்கு முன்பதிவு தொடங்கும் நிலையில் madurai.nic.in என்ற மதுரை மாவட்ட இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த இணையதளத்தில் இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்து முடிக்க வேண்டும். மேலும் இந்த ஆன்லைன் விபரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்ட பிறகு தகுதி வாய்ந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அவர்கள் போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.