தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டின் முதல் நாள் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் ஆளுநர் ரவி உரையாற்ற இருந்தார். ஆளுநர் அவைக்குள் வந்ததிலிருந்து சட்டசபை உறுப்பினர்கள் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநரை சூழ்ந்து கொண்டு தோஷம் எழுப்பியதால் அவர் உரையை வாசிக்காமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதைத்தொடர்ந்து அவைக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட உறுப்பினர்களை உடனடியாக வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல் வெளியேறியதற்கான காரணம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் ஒலிக்கப்படுவது வழக்கம். ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்ட நிலையில் தேசிய கீதம் ஒலிக்கப்படவில்லை. கடந்த முறையும் தமிழ் தாய் வாழ்த்துக்கு பிறகு தேசிய கீதம் பாடப்பட வேண்டுமென்று ஆளுநர் வலியுறுத்தி இருந்தார். ஆனால் இந்த முறையும் அப்படி நடக்கவில்லை. மேலும் இதனால் தான் ஆளுநர் வெளியேறியதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆளுநர் ரவி அவையை விட்டு வெளியேறியதால் அவருக்கு பதிலாக அந்த உரையை சபாநாயகர் அப்பாவு தமிழில் படித்து வருகிறார். ஒவ்வொரு முறையும் சட்டசபை கூட்டத்தொடர் ஆண்டின் முதலில் கூடும்போது அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து ஆளுநர் அறிக்கையாக படிப்பது வழக்கம். கடந்த முறை ஆளும் அரசு கொடுத்த அறிக்கைக்கு பதிலாக ஆளுநர் வேறொரு அறிக்கையை வாசித்தார். இந்த வருடம் உரையை படிக்காமலேயே ஆளுநர் வெளியேறிவிட்டார்.