ரசிகர்கள் மீது கூட பயம் இருக்குப்பா… மதகஜ ராஜா பிரஸ்மீட்டில் திடீர் ரிலீஸ் குறித்து பேசிய சுந்தர்.சி
CineReporters Tamil January 06, 2025 05:48 PM

மதகஜ ராஜா 

மதகஜ ராஜா 

SundarC: விஷால் நடிப்பில் மதகஜ ராஜா ரிலீஸ் குறித்து நேற்று நடந்த பிரஸ்மீட்டில் இயக்குனர் சுந்தர் சி பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

சினிமா துறையில் ஒரு படம் வெளியாகி அடுத்த ஆறு மாதங்களுக்குள் வெளிவந்தால் மட்டுமே அப்படத்திற்கான வரவேற்பு ரசிகர்களிடம் இருக்கும். ஆனால் சில திரைப்படங்கள் பல ஆண்டுகள் கழித்து வெளியானால் கூட ரசிகர்கள் அதற்காக எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள்.

அயலான், அந்தகண் லிஸ்டில் இருந்த மதகஜ ராஜா திரைப்படமும் இதில் அடக்கம். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இத்திரைப்படம் வரும் ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. இப்படத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர்கள் சிலர் தற்போது உயிருடன் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சில தயாரிப்பாளர்கள் இந்த படத்தை வெளியிட முன்வந்ததால் தற்போதைய படம் பொங்கல் ரேஸில் இணைந்துள்ளது. விஜய் ஆண்டனி இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் இன்றளவும் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் விஷாலும் தன்னுடைய குரலில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். படம் குறித்த பிரஸ்மீட் நேற்று நடந்திருக்கிறது. இதில் இயக்குனர் சுந்தர் சி, நடிகர் விஷால் மற்றும் விஜய் ஆண்டனி கலந்து கொண்டனர். அப்பொழுது பேசிய இயக்குனர் சுந்தர் சி, ஜனரஞ்சகமான ஒரு படம் எடுக்க நினைத்தேன்.

ஆனால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்விட்டது. மீண்டும் ரிலீஸ் செய்யும்போது இதை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என பயம் இருந்தது. ஆனால் அதன் அறிவிப்பு வெளிவந்தவுடன் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. தற்போது நம்பிக்கையும் வந்திருக்கிறது.

இப்படத்தை பார்க்க திருப்பூர் சுப்ரமணியம் சார் எனக்கு நடு இரவில் கால் செய்திருந்தார். 12 மணிக்கு கால் செய்கிறாரே என தயக்கத்தில் போனை எடுத்தேன். ஆனால் அவர் படம் குறித்து பேசினார். 12 வருடங்களுக்கு முன் எடுத்த படம் எப்படி இருக்குமோ என நினைத்துதான் படம் பார்த்தேன். படம் அருமையாக வந்திருக்கிறது என கூறினார்.

என்னுடைய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்திலிருந்து தற்போது வரை அவர் தான் படத்தை ரிலீஸ் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் மற்ற படத்திற்கும் அவர் வசூல் குறித்து மட்டுமே பேசுவார். முதல் முறையாக இந்த படம் குறித்து தான் அவர் பேசியிருக்கிறார்.

30 நிமிடம் பேசினோம் என்ன பேசணும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். நாளை படம் சரியாக செல்லவில்லை என்றால் அதற்காக நீங்கள் என்னை கலாய்ப்பீர்கள். இப்படத்தில் விஷாலை 8 பேக்ஸில் வர சொன்னேன். அவரும் கடுமையாக உழைத்து உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்.

ஆனால் படத்தின் கிளைமாக்ஸ் ஷூட் செய்ய தாமதமானது. அதற்காக விஷால் ஒரு வருடமாக சரியாக சாப்பிடாமல் 8 பேக்ஸை மெயிண்டெய்ன் செய்து வந்தார். என்னுடைய குரு மணிவண்ணன் நடிச்சிருக்காரு. மனோபாலா இப்படம் வந்தால் என் ரேஞ்சே வேறனு சொல்லுவாரு. ஆனா இப்போ அவங்க நம்மக்கூட இல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.